கொரோனா வைரஸ் தொற்றுடன் நுரையீரல் பாதிப்பு உள்ள நோயாளிகளுக்கு, உயர்தர சிகிச்சை அளிப்பதற்கு வசதியாக 76 கோடியே 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அதி நவீன உயர் ஓட்ட ஆக்சிஜன் கருவிகள் வாங்கப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் மூலம் 2 ஆயிரத்து 414 கருவிகள் கொள்முதல் செய்ய ஆணை பிறப்பிக் கப் பட்டு, இதுவரை, 530 கருவிகள் வந்து சேர்ந்து விட்டதாக செய்திக் குறிப்பு ஒன்றில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.
சுவாச கோளாறு உள்ள நோயாளிகளுக்கு குழாய் மூலம் ஆக்சிஜனை அதிக பட்சமாக ஒரு நிமிடத்திற்கு 12 லிட்டர் மட்டுமே வழங்க இயலும் என்றும், ஆனால், இந்த புதிய கருவியின் மூலம் அதிக பட்சமாக ஒரு நிமிடத்திற்கு 60 லிட்டர் ஆக்ஸிஜனை வழங்க முடியும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
இந்த புதிய கருவியை, நோயாளிகள், தேவைக்கு ஏற்ப தாங்களாகவே பொருத்திக் கொள்ள முடியும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்