திருப்போரூர் திமுக எம்எல்ஏ இதயவர்மன் வீட்டில் கைப்பற்றப்பட்ட துப்பாக்கி விலங்குகளை வேட்டையாடும் ஏர் ரைபிள் வகையைச் சேர்ந்தது எனக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் இதயவர்மன் வீட்டில் காவல்துறையினர் சோதனையிட்டதில் 3 துப்பாக்கிகளைப் பறிமுதல் செய்தனர். கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகளில் ஒன்று 0.22 கலோரி கிராஸ்மென் ஏர் ரைபிள் வகையைச் சேர்ந்தது எனக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தத் துப்பாக்கியில் பயன்படுத்தும் 4 கிலோ தோட்டாக்கள், தோட்டாக்களைத் தயாரிக்கும் இயந்திரம், தோட்டாக்கள் செய்வதற்கான மருந்துகள்,கைத்துப்பாக்கியில் பயன்படுத்தும் 4 தோட்டாக்கள் ஆகியனவும் பறிமுதல் செய்யப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.