திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் இதய வர்மனின் ஜாமீன் மனு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
திருப்போரூர் அருகே செங்காட்டில் நிலத் தகராறில் இதயவர்மனின் தந்தை லட்சுமிபதியை ஒரு பிரிவினர் தாக்கியதாகவும், இதையடுத்து இதயவர்மனும் அவரது ஆதரவாளர்களும் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் காயமடைந்ததாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது- இது தொடர்பாக காவல்துறையினர் இதயவர்மனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் ஜாமீன் கோரி இதயவர்மன் சார்பில் தாக்கல் செய்த ஜாமீன் மனு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. இதயவர்மன் கைது செய்யப்பட்டபோது இரண்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதனை அடுத்து நேற்று முன் தினம் அவர் வீட்டில் நடைபெற்ற சோதனையின் போது மேலும் ஒரு துப்பாக்கியும், பயன்படுத்திய குண்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நிலையில் அவருக்கு ஜாமீன் வழங்கக் காவல்துறை சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.