விஷ வாயு தாக்குதல் இன்றி கழிவுகளை அகற்றும் ரோபோ டூ பாயின்ட் ஓ என்ற அதி நவீன இயந்திரம் புதிதாக 34 நகரங் களுக்கு வழங்கப்படும் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அறிவித்துள்ளார்.
கோவை மாநக ராட்சி அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப்பின், செய்தி யாளர் களிடம் பேசிய அவர், இதுபோன்ற 5 அதி நவீன கருவிகள், கோவை மாநகராட்சிக்கு வ ழங்கப்பட்டு உள்ளது என்றார்.
எனவே, இது பயன்பாட் டிற்கு வரும் போது மனித கழிவுகளை மனிதர் அகற்றும் சூழல் இல்லாத நிலை ஏற்படும் என்று அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.
முன்னதாக, புதிதாக வாங்கப்பட்ட 5 கழிவுநீர் அகற்றும் தானியங்கி ரோபோ இயந்திரங்களின் செயல்பாட்டை துவக்கி வைத்த அமைச்சர் எஸ்.பி வேலுமணி, கோவையில் கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிய உதவும் Kovai Care என்ற புதிய செயலியை அறிமுகம் செய்து வைத்தார்.