கொரோனா தொற்று நோயின் தீவிரத் தன்மையை குறைக்க முதியவர்களுக்கு சோதனை அடிப்படையில் பிசிஜி தடுப்பு மருந்து வழங்கவுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், இருதயம் சார்ந்த பிற நோய்கள் உடைய முதியவர்களை கொரோனா தொற்று அதிகம் தாக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஐ.சி.எம்.ஆர். அறிவுறுத்தலின் படி, 60 வயது முதல் 95 வயது வரையிலான முதியவர்களுக்கு உள்ளார்ந்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பிசிஜி தடுப்பு மருந்தை செலுத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரசுக்கு இதுவரை உரிய தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், முதியவர்களுக்கு பிசிஜி தடுப்பு மருந்தினை செலுத்தி அதன் செயல்திறனை ஆராயும் முயற்சியை ஐ.சி.எம்.ஆர். நிறுவனத்தின் கீழ் இயங்கும் தேசிய காசநோய் ஆராய்சி நிறுவனம் வெகு விரைவில் தொடங்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.