சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு தொடர்பாக காவலர் முத்துராஜிடம் சிபிஐ அதிகாரிகள் சுமார் 2 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த வழக்கில் முதலில் கைது செய்யப்பட்ட ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 5 காவலர்களை, 2 நாட்களுக்கு காவலில் எடுத்து விசாரிக்க மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றம் சிபிஐக்கு அனுமதி அளித்தது.
இதைதொடர்ந்து, நேற்று இரவு 10 மணிக்கு சாத்தான்குளம் காவல்நிலையத்திற்கு காவலர் முத்துராஜ் அழைத்துவரப்பட்டு, சம்பவத்தன்று ஜெயராஜை அழைத்து வந்தது அதையடுத்து தந்தை மகன் தாக்கப்பட்டது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து, பெனிக்ஸின் கடை உள்ள பகுதிக்கு முத்துராஜ் அழைத்து செல்லப்பட்டு, ஜெயராஜை கைது செய்தது எப்படி என நடித்து காட்ட சொல்லி வீடியோவாக பதிவு செய்யப்பட்டது. ஊரடங்கு உத்தரவை மீறியதாக ஜெயராஜை கைது செய்ததும், ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸை கோவில்பட்டி சிறைச்சாலைக்கு அழைத்து சென்றதும் முத்துராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.