இம்மாதம் 15 ஆம் தேதி வரை தமிழகத்தில் ரத்து செய்யப்பட்ட சிறப்பு ரயில்கள், தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று வரும் 31 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
திருச்சி-செங்கல்பட்டு, மதுரை-விழுப்புரம், கோவை-காட்பாடி, அரக்கோணம்-கோவை, கோவை-மயிலாடுதுறை, திருச்சி-நாகர்கோயில் ஆகிய மார்க்கங்களில் இந்த ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன.
இந்த ரயில்களில், ரத்தான காலத்திற்கு முன்பதிவு செய்தவர்களுக்கு, 100 சதவிகித டிக்கெட் கட்டணம் திருப்பி வழங்கப்படும். ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்தவர்களுக்கு தானாகவே வங்கிக் கணக்கில் பணம் வந்து சேரும்.
முன்பதிவு மையங்களில் வாங்கப்பட்ட டிக்கெட்டுகளை 6 மாதங்களுக்குள் திருப்பி கொடுத்து பணம் பெற்றுக் கொள்ளலாம். அதே நேரம் அடுத்த அறிவிப்பு வரும் வரை சென்னை சென்டிரல்-நியூ டெல்லி ராஜதானி விரைவு வண்டி வழக்கம் போல் இயக்கப்படும்.