செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

சாத்தான்குளம் இரட்டைக் கொலை ...கஸ்டடியில் 5 போலீசார்... சிபிஐ சரமாரி கேள்வி..!

Jul 14, 2020 07:36:48 PM

சாத்தான் குளம் இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 5 போலீசாரையும், நீதிமன்ற அனுமதியுடன் காவலில் எடுத்துள்ள சிபிஐ அதிகாரிகள், மதுரை ஆத்திக்குளம் சிபிஐ அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். 5 போலீசாரையும் கேள்விகளால் துளைத்தெடுப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகள், ஏற்கனவே இவ்வழக்கில் கைதான 5 போலீசாரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். அந்த மனு இன்று நீதிபதி ஹேமானந்த குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர்கள், முத்துராஜ், முருகன் ஆகியோர், மதுரை மத்திய சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். விசாரணையின் போது வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள், சிபிஐ அதிகாரிகள் தவிர வேறு யாரும் நீதிமன்ற அறைக்குள் அனுமதிக்கப்படவில்லை.

அப்போது கைது செய்யப்பட்ட 5 போலீசாரையும் காவலில் எடுத்தால் தான் முழுமையாக விசாரணை நடத்த முடியும் என சிபிஐ தரப்பில் வாதிடப்பட்டது. இதனை கேட்ட நீதிபதி தொடர்ந்து சிபிஐ காவலுக்கு செல்ல சம்மதமா என கேட்டதற்கு, 5 போலீசாரும் ஆட்சேபம் இல்லை என பதில் அளித்தனர். அதே சமயம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் ஆகியோர், சிபிஐ விசாரணையின் போது தங்களது வழக்கறிஞர்களை உடன் அனுமதிக்குமாறு கோரிக்கை வைத்தனர்.

அதற்கு இந்த வழக்கை பொறுத்தவரை 80 சதவீத விசாரணை முடிவடைந்து விட்டதாகவும், எனவே 5 நாட்கள் சிபிஐ காவல் தேவை இல்லை எனவும் தெரிவித்த நீதிபதி, 2 நாட்கள் மட்டும் சிபிஐ காவலுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார். மேலும் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் ரகு கணேஷுக்கு, சிபிஐ காவலில் இருக்கும் 2 நாட்களுக்கும் தினமும் ஒரு மணி நேரம் தங்கள் வழக்கறிஞர்களை சந்தித்து பேசவும் அனுமதி வழங்கினார். 2 நாள் காவல் முடிந்து 16ம் தேதி மாலை 5.30 மணிக்கு முன்பாக 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டார்.

இதையடுத்து போலீசார் 5 பேரும் சிபிஐ ஏடிஎஸ்பி விஜயகுமார் சுக்லா தலைமையிலான அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். தொடர்ந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட 5 பேருக்கும் உடல்நலம், கொரோனா உள்ளிட்ட மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டு, மதுரை ஆத்திகுளம் சிபிஐ அலுவலகத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். முன்னதாக வழக்கு தொடர்பான ஆவணங்களையும் சிபிஐ அதிகாரிகள் ஆத்திகுளம் சிபிஐ அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர். அங்கு வைத்து சாத்தான் குளம் காவல் நிலையத்திற்கு ஜெயராஜ் - பென்னிக்ஸ் அழைத்துவரப்பட்ட போது நடந்தவை குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். நாளை காலை 5 போலீசாரையும் சாத்தான்குளத்தில் சம்பவம் நடைபெற்ற இடங்களுக்கு நேரில் அழைத்து சென்று, சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.


Advertisement
ஓராண்டாகியும் கிடைக்காத பயிர் காப்பீட்டுத் மற்றும் இழப்பீடு தொகை - விவசாயிகள் போராட்டம்
அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா ஏற்பாடுகள் ஆரம்பம்..
மாணவிகளுக்கு பாலியல் கொடுமை.. பள்ளி நிர்வாகிகளுக்கு நெஞ்சுவலியாம்.. மருத்துவமனையில் படுத்துக் கொண்டனர்..! போக்சோவில் கைதானவர்கள் “லைவ் ஆக்டிங்”
கோவிலில் கைவரிசை காட்டியவருக்கு போலீசார் வலைவீச்சு..!
விஐடி பல்கலைகழகத்தில் 40 வது ஆண்டு விழாவில் ருசிகரம்..!
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல அனுமதி..
பாம்பன் சாலை பாலத்தில் போராட்டம் நடத்திய ராமேஸ்வரம் மீனவர்கள்..!
தஞ்சையில் அய்யம்பட்டி அரசு தொடக்கப்பள்ளில் மாணவர்கள் வாயில் டேப் ஒட்டிய விவகாரம்..!
இ.பி.எஸ் பண்பாடு இல்லாமல் பேசுகிறார் : முதலமைச்சர்
பெண்ணை அடித்துக் கொன்று மூட்டையில் கட்டி வீசிய நபர் - போலீசார் விசாரணை

Advertisement
Posted Nov 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

மாணவிகளுக்கு பாலியல் கொடுமை.. பள்ளி நிர்வாகிகளுக்கு நெஞ்சுவலியாம்.. மருத்துவமனையில் படுத்துக் கொண்டனர்..! போக்சோவில் கைதானவர்கள் “லைவ் ஆக்டிங்”

Posted Nov 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தீரா சந்தேகத்தால் கொடூரம் மனைவியை 6 துண்டுகளாக கூறுபோட்டு வீசிய கணவன்..!

Posted Nov 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

எப்படி இருந்த நான்... இப்படி ஆயிட்டேன் பம்பரகட்ட தலை... பவ்யமான பின்னணி பைக் வீலிங் சாகசத்தால் ரூ.4000 பழுத்தது..!

Posted Nov 11, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

UTS செயலியில் டிக்கெட் எடுப்பவரா? அபராதத்தைத் தவிர்க்க கவனம் தேவை அறிவுறுத்தும் ரயில்வே அதிகாரிகள்

Posted Nov 11, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ஒப்பற்ற நடிப்புத் திறன்.! இயல்பாக பழகும் குணம்.! என்றென்றும் டெல்லி கணேஷ்.!


Advertisement