தமிழகம் முழுவதும் கொரோனா சிகிச்சை முகாமிலிருப்பவர்களில் 61ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு யோகாபயிற்சியும், இயற்கை மருத்துவ சிகிச்சையும் வழங்கப்பட்டிருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அறிக்கையில், தமிழகம் முழுவதும் உள்ள 86 சிகிச்சை முகாம்களில் கொரோனா நோயாளிகளின் நுரையீரல் செயல்திறனை அதிகரிக்க மூச்சுப்பயிற்சியும், நோய் எதிர்ப்பு சக்திக்காக சில ஆசனப் பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளது என்றும், இயற்கை மருத்துவ முறையில் மூலிகை பானங்கள், நவதானிய வகைகள், சிறு தானியங்கள் உள்ளிட்ட ஆரோக்கிய உணவுகள் வழங்கப்படுவதாகவும், நீராவி பிடித்தல், சுவாசத்திற்கான நறுமணச் சிகிச்சைகள் (Aroma Therapy) அளிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
200க்கும் மேற்பட்ட அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவத்துறை மருத்துவர்கள் இந்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.