சென்னை நந்தம்பாக்கம் மியாட் மருத்துவமனையில் கொரோனா பாதித்து சிகிச்சை எடுத்து வரும் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் உடல்நிலை முன்னேறியதையடுத்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்.
கொரோனா அறிகுறி ஏற்பட்டதால் மருத்துவமனை சென்ற அமைச்சருக்கு பரிசோதனை நடத்தப்பட்டதில் தொற்று உறுதியானது. இதையடுத்து அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கொரானாவுக்கான தீவிர சிகிச்சை பிரிவு வார்டில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த சிகிச்சையில் அமைச்சரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அமைச்சர் கே.பி. அன்பழகன் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். அங்கு இன்னும் ஓரிரு நாள்கள் அமைச்சர் ஓய்வெடுக்க இருப்பதாகவும், அதன்பிறகு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.