ஏழை மாணவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சத்துணவு மையங்கள் மூலம் விட்டமின் மருந்துகள் வழங்குவது போன்ற திட்டங்களை வகுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
தமிழகத்தில் செயல்படும் அம்மா உணவகங்களில் இலவச முட்டைகள் வழங்கவும், ஏழை மாணவர்களுக்கு சத்துணவு வழங்க திட்டம் வகுக்க கோரியும் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
நீதிபதிகள் எம்.எம்.சுந்தரஷ், ஹேமலதா அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளநிலையில், சத்துணவு மையங்கள் மூலம் மாணவர்களுக்கு சத்துணவு வழங்க உத்தரவிடுமாறு மனுதாரர் கோரினார்.
இதையடுத்து, மாணவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சத்துணவு மையங்கள் மூலம் விட்டமின் மருந்துகள் வழங்குவது போன்ற திட்டங்களை வகுக்க அறிவுறுத்தியதுடன், மனுவுக்கு ஜூலை 20 ஆம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.