செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

கொரோனா அறிகுறியின் 3 நிலைகள்.. வழிகாட்டுதல்கள் வெளியீடு..!

Jul 12, 2020 05:26:01 PM

கொரோனா அறிகுறிகள் மற்றும் சுய கண்காணிப்பு குறித்த வழிகாட்டுதல்களை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. 

காய்ச்சல், வறட்டு இருமல், சளி, மூச்சுத் திணறல், உடல் சோர்வு, தலைவலி, நாக்கில் சுவை இழப்பு, மூக்கில் நுகர்வுத் தன்மை இழப்பு ஆகியவை முக்கிய அறிகுறிகளாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

முதல் நிலையில் எந்த அறிகுறியும் தெரியாது என்றும், 2-ஆம் நிலையில் சாதாரண அறிகுறிகள் தெரியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது, ரத்தத்தில் பிராண வாயு அளவைத் தெரிவிக்கும் பல்ஸ் ஆக்சிமீட்டர் (Pulse Oximeter) மூலம், பரிசோதித்து பிராண வாயு அளவு 95 சதவீதத்துக்கும் குறைவாக இருந்தால் உடனடியாக மருத்துவமனையில் சேர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

3-ஆம் நிலையில் அதிக மூச்சு வாங்குதல், அதிக நாடித் துடிப்பு, ஒரு நிமிட சுவாச எண்ணிக்கை 24க்கும் குறைவு, மயக்க நிலை உள்ளிட்ட கடுமையான அறிகுறிகள் இருக்கும் என்றும் உடனடியாக தீவிர கண்காணிப்புப் பிரிவில் சேர்க்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டு மருத்துவப் பெட்டியில் தெர்மா மீட்டர், முகக் கவசம், கையுரை, கிருமிநாசினி, பிராணவாயு அளவிடும் கருவி இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

உடலின் வெப்ப நிலை 98.4 டிகிரி பாரன்ஹீட்டுக்கு குறைவாக இருக்க வேண்டும் என்றும் நாடித்துடிப்பு 70-ல் இருந்து 80க்குள் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவாசம் சராசரியாக பெரியோருக்கு 16 முதல் 18-ஆகவும் சிறியோருக்கு 20 முதல் 25-ஆகவும் இருக்க வேண்டும் என்றும், இரத்தத்தில் பிராண வாயு அளவு 95 முதல் 100 சதவீதமாக இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. மாறாக இருந்தால் உடனடியாக மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Advertisement
தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி.. தலைமறைவான கணவன், மனைவி மீது புகார்
பைக் மீது வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி விபத்து.. 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு அக்.27ல் நடைபெறும்: விஜய்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்


Advertisement