பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பைத் தடை செய்யக் காரணமாக இருந்த தமிழக டிஜிபியின் அறிக்கையில் உள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பைச் சேர்ந்த இருவர் காவலர்களுடன் சேர்ந்து தாக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த அமைப்பை நிரந்தரமாகத் தடை செய்வது குறித்து உள்துறைச் செயலாளர், தமிழக டிஜிபி ஆகியோர் பதிலளிக்க மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டது.
டிஜிபி கொடுத்த அறிக்கையின் அடிப்படையில், பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பைத் தமிழக அரசு நிரந்தரமாகத் தடை செய்தது. பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பைத் தமிழகம் முழுவதும் தடை செய்யும் அளவுக்கு என்னென்ன மாதிரியான குற்றங்களைச் செய்துள்ளது என்று டிஜிபி வழங்கிய அறிக்கையை வெளியிட்டு அது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டும் என மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.