கொரோனாவில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பியவர்கள், நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும் பிளாஸ்மா தானம் செய்ய முன்வருமாறு, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அழைப்பு விடுத்துள்ளார்.
திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த வேண்டுகோளை விடுத்தார்.
வளர்ந்த நாடுகளே ஆக்சிஜன் படுக்கை வசதிக்காக தடுமாறக் கூடிய நிலையில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு அதிக அளவில் படுக்கை வசதியை ஏற்படுத்தி
வருவதாக கூறிய அவர், திருவள்ளூர் மாவட்டத்தில் 3 ஆயிரம் படுக்கைகளில் ஆக்சிஜன் வசதி செய்து தரப்படும் என உறுதி அளித்தார்.
பொது இடங்களில் அனைவரும் முக கவசம் அணிந்து, தனிநபர் இடைவெளியை கடைபிடிக்குமாறு, பொது மக்களை, அமைச்சர் விஜயபாஸ்கர் மீண்டும் கேட்டுக்கொண்டார்.