தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் 171 கோடி ரூபாய் அளவுக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளன.
இம்மாதத்தில் வரும் 4 ஞாயிற்றுக்கிழமைகளிலும் தமிழகம் முழுவதும் தளர்வற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அதன்படி முதலாவது ஞாயிற்றுக்கிழமையான இன்றும், தளர்வற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய கடைகளுக்கே அனுமதி அளிக்கப்படாத நிலையில், மதுபானக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் குடிமகன்கள் பலரும் முன்யோசனையும் சனிக்கிழமையே மதுபானங்களை வாங்கி குவித்ததால், தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 171 கோடி ரூபாய்க்கு மதுவிற்பனை நடைபெற்றுள்ளது.
சென்னை காவல் எல்லைக்குட்பட பகுதிகள் தவிர்த்து சென்னை மண்டலத்தில் 20 கோடி ரூபாய்க்கும், மதுரை மண்டலத்தில் 40 கோடி ரூபாய்க்கும் மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன. திருச்சியில் 38 கோடி, சேலத்தில் 37 கோடி, கோவையில் 34 கோடிக்கும் மது விற்பனை நடந்துள்ளது.