போலி இ-பாஸ் வைத்திருப்போர் மீது கிரிமினல் குற்ற வழக்கு பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என, சென்னை போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர் கண்ணன் எச்சரித்துள்ளார்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, நாளை முதல் சில தளர்வுகளுடன் நடைமுறைக்கு வர உள்ளது. இந்நிலையில், கொரோனா முன்னெச்சரிக்கைகளை பின்பற்றுவது தொடர்பாக ஆட்டோ ஓட்டுனர்கள், லாரி உரிமையாளர்கள் சங்கம் உள்பட பல்வேறு அமைப்பினருடன் போக்குவரத்து காவல்துறை சார்பில் ஆலோசனை நடத்தப்பட்டது.
பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த கூடுதல் காவல் கண்ணன், பொதுமக்கள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பின்பற்றி காவல்துறைக்கு ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும், ஊரடங்கு சமயத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நாளை முதல் திருப்பி அளிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.