தமிழகம் முழுவதும் இன்று நள்ளிரவு 12 மணி முதல் நாளை நள்ளிரவு 12 மணி வரை பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் விற்பனை நடைபெறாது என தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்க தலைவர் முரளி அறிவித்துள்ளார்.
ஜூலை மாதத்தில் வரும் 4 ஞாயிற்றுகிழமைகளிலும் தமிழகம் முழுவதும் தளர்வற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி இன்று சனிக்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் நாளை ஞாயிறு நள்ளிரவு 12 மணி வரை, தமிழகத்திலுள்ள அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும் எரிபொருள் விற்பனை நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல் வரும் 6ம் தேதி முதல் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் நிலையங்களில் விற்பனை மேம்பாட்டு நிகழ்வுகளை நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.