செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

சாத்தான்குளம் இரட்டைக் கொலை காவலர் முத்துராஜ் சிறையில் அடைப்பு

Jul 04, 2020 10:01:29 AM

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் கடந்த 2 நாட்களாக தேடப்பட்ட காவலர் முத்துராஜ் கைது செய்யப்பட்டார். அவரிடம் விடிய விடிய விசாரணை நடைபெற்ற பின், நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சாத்தான்குளம் காவல்நிலையத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் சித்திரவதை செய்து கொல்லப்பட்டது தொடர்பாக சிபிசிஐடி காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், காவலர் முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் கடந்த 2 நாட்களாக தேடப்பட்ட காவலர் முத்துராஜ், விளாத்திகுளம் அருகே முள்ளூர் காட்டுப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார். அவரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முத்துராஜ் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கீழ மங்கலம் கிராமத்தில் காட்டுப் பகுதியில் அவரது இருசக்கர வாகனம் மீட்கப்பட்டது.

இதனிடையே, இந்த வழக்கில் நேரடி சாட்சியாக உள்ள தலைமை காவலர் ரேவதி, ஏற்கனவே நீதிபதி பாரதிதாசனிடம் சாட்சியம் அளித்துள்ள நிலையில், தூத்துக்குடி முதன்மை நடுவர் நீதிமன்ற நீதிபதி ஹேமா முன் ஆஜராகி சுமார் 5 மணி நேரம் சாட்சியம் அளித்தார். தொடர்ந்து ரேவதியிடம் சிபிசிஐடி ஐஜி சங்கர் மற்றும் விசாரணை அதிகாரி அனில் குமார் விசாரணை நடத்தினர்.

அதேபோல் ஜூன் 19ஆம் தேதியன்று, வேறொரு வழக்கிற்காக, சாத்தான்குளம் காவல்நிலையத்திற்கு சென்ற வழக்கறிஞர்களான கார்த்தீசன் மற்றும் அலெக்சாண்டரிடம், நீதிபதி பாரதிதாசன் விசாரணை நடத்தினார். அப்போது, போலீசார் ஜெயராஜை அடித்து இழுத்துச் சென்றதை பார்த்ததாக வழக்கறிஞர் கார்த்தீசன் மற்றும் அலெக்சாண்டர் ஆகியோர் சாட்சியம் அளித்தாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சம்பவத்தன்று செவிலியராக பணிபுரிந்த கிருபை என்பவரும் நீதிபதி முன் ஆஜராகி அளித்த வாக்குமூலத்தில், மருத்துவமனைக்கு 2 பேரையும் போலீசார் கூட்டி வந்தபோது இருவருக்கும் உடலில் ரத்த காயங்கள் இருந்ததாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

சாத்தான்குளம் நீதிமன்றத்திலிருந்து கோவில்பட்டி சிறைச்சாலைக்கு ஜெயராஜையும், பெனிக்சையும் தனியார் வாகனத்தில் அழைத்துச்சென்ற வாகன ஓட்டுனர் நாகராஜ் என்பவரும் விசாரணைக்கு ஆஜரானார்.

தந்தை, மகன் இருவரையும் கோவில்பட்டியில் இறக்கிவிட்ட போது காரின் பின் சீட்டில் உள்ள பெட்சீட்டில் ரத்தக்கறை இருந்ததாகவும், இதேபோல் சீட்டின் இருக்கையிலும் லேசான ரத்தக் கறை இருந்ததாகவும் ஓட்டுனர் நாகராஜ் தெரிவித்துள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement
கை கொடுக்கும் காளான் வளர்ப்பு.. வாய்ப்பை வழங்கும் வேளாண் பல்கலை..
மதுரையில் மங்கி குல்லா கொள்ளையர்கள் கைவரிசை - சி.சி.டி.வி காட்சி வெளியீடு
புத்தக வெளியீட்டு விழாவில் விஜயுடன் பங்கேற்பது குறித்து ஆலோசித்து முடிவு - திருமா
விசாரணைக்கு அழைத்த நபர் வர மறுத்ததால் அடித்து,உதைத்த காவலர் இடமாற்றம் ..
8 செ.மீ மழையை தாங்கும் வகையில் வடிகால் அமைப்பு உள்ளன - அமைச்சர் கே.என்.நேரு
பழனி அருகே பேருந்தில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவிகளை மருத்துவமனையில் அனுமதி..
பள்ளி மாணவியை காப்பாற்றிய ஆயுதப்படை காவலர்.!
திருச்சியில் 5 பள்ளிகளுக்கு 3ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்..!
நூலகப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் சேகர் பாபு
கன்னியாகுமரியில் கனமழையால் கரைந்தோடிய புதிதாக போடப்பட்ட இண்டர்லாக் சாலை

Advertisement
Posted Nov 05, 2024 in தமிழ்நாடு,Big Stories,

கை கொடுக்கும் காளான் வளர்ப்பு.. வாய்ப்பை வழங்கும் வேளாண் பல்கலை..

Posted Nov 05, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

50 கிராம் நகைக்காக மூதாட்டியை கொன்று டிராலியில் அடைத்த குடும்பம்..! நெல்லூர் டூ மீஞ்சூர் ரெயில் திகில்..

Posted Nov 05, 2024 in Big Stories,

மாடியில தொட்டிக் கட்டி“காய்கறி தோட்டம் ”நகரத்து பெண் விவசாயி..! வாங்க நாமும் தோட்டம் அமைக்கலாம்

Posted Nov 05, 2024 in உலகம்,Big Stories,

தேர்தலுக்கு தயாராகும் அமெரிக்கா! உலகின் வித்தியாசமான தேர்தல் முறை அதிபர் தேர்வு நடப்பது எப்படி?

Posted Nov 05, 2024 in Big Stories,

எமனாக மாறிய இரும்பு கட்டில்.. தந்தை மகனின் கழுத்தை இறுக்கிய விபரீதம்.. இரும்பு கட்டில் வைத்திருப்போர் கவனத்திற்கு..


Advertisement