சாத்தான்குளம் வழக்கின் நேரடி சாட்சியான தலைமை காவலர் ரேவதி தூத்துக்குடி நீதிபதி முன்பு ஆஜராகி, விளக்கம் அளித்தார். அச்சுறுத்தல் காரணமாக பாதுகாப்பு அளிக்கப்பட்டது பற்றி அவர் விளக்கம் அளித்திருக்கலாம் என கருதப்படுகிறது.
தந்தை-மகனான ஜெயராஜ்-பென்னிக்ஸ், சாத்தான்குளம் காவல்நிலையத்தில் வைத்து சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட சம்பவத்தில், அங்கு பணிபுரியும் தலைமைக்-பென்னிக்ஸ், சாத்தான்குளம் காவல்நிலையத்தில் வைத்து சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட சம்பவத்தில், அங்கு பணிபுரியும் தலைமைக் காவலர் ரேவதி நேரடி சாட்சியாக உள்ளார்.
அவருக்கு அச்சுறுத்தல்கள் ஏற்படலாம் என்பதால் உரிய பாதுகாப்பு அளிக்கும்படி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்தது. மேலும் இதுதொடர்பாக, தூத்துக்குடி நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தியிருந்தனர். இந்நிலையில், பகல் 12.15 மணிக்கு தூத்துக்குடி முதன்மை குற்றவியல் நீதிமன்றத்திற்கு வந்த ரேவதி, மாஜிஸ்திரேட் ஹேமா முன்னிலையில் ஆஜராகி விளக்கமளித்தார்.
அச்சுறுத்தல் காரணமாக பாதுகாப்பு அளிக்கப்பட்டது பற்றி அவர் விளக்கம் அளித்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இதனிடையே, சிபிசிஐடி காவல் ஆய்வாளர் சேகர் தலைமையில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் மீண்டும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அவர்கள், சாத்தான்குளம் காவல் நிலைய பகுதிகளில் பிரண்ட்ஸ் ஆப் போலீசாக பணியாற்றியவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் பெனிக்ஸ் கடை முன்பு உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் உள்ள ஆட்டோ ஓட்டுனரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
திருச்செந்தூர் அரசினர் விருந்தினர் மாளிகையில் வைத்து கோவில்பட்டி நடுவர் மன்ற நீதிபதி பாராதாசன் 7-ஆவது நாளாக இன்றும் விசாரணை நடத்தி வருகிறார். அவர் முன்பு, சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சம்பவத்தன்று செவிலியராக பணிபுரிந்த கிருபை என்பவர் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். அப்போது செவிலியர் கிருபை, மருத்துவமனைக்கு 2 பேரையும் போலீசார் கூட்டி வந்தபோது இருவருக்கும் உடலில் ரத்த காயங்கள் இருந்ததாக தெரிவித்துள்ளார்.
இதேபோல் சாத்தான்குளம் நீதிமன்றத்திலிருந்து கோவில்பட்டி சிறைச்சாலைக்கு ஜெயராஜையும், பெனீக்சையும் தனியார் வாகனத்தில் அழைத்துச்சென்ற வாகன ஓட்டுனர் நாகராஜ் என்பவரும ஆஜரானார்.
அப்போது அவர், சாத்தான்குளம் நீதிமன்றத்தில் இருந்து 2 பேரையும் அழைத்து வந்தபோது நல்ல முறையில் நடந்து வரவில்லை என்றும், காலில் அடிபட்டது போல் நடந்து வந்தனர் என்றும், வாகனத்தில் வரும்போது இருவரும் விரைவில் வழக்கறிஞர்கள் மூலம் ஜாமீன் எடுக்க வேண்டுமென்றும் பேசிக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.
அவர்களை கோவில்பட்டியில் இறக்கிவிட்ட போது வண்டியின் பின் சீட்டில் உள்ள பெட்சீட்டில் ரத்தக்கரை இருந்ததாகவும், இதேபோல் சீட்டின் இருக்கையிலும் லேசான ரத்தக் கரை இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.