தமிழகத்தில் சத்துணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் பள்ளி மாணவர்களுக்கு மே மாதத்திற்கான சத்துணவு பொருட்களை உலர் உணவு பொருட்களாக வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சத்துணவு திட்டத்தின் கீழ் 42லட்சத்து 61ஆயிரம் மாணவர்கள் பயன்பெறுகின்றனர். இந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால், மாணவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படாமல் தடுக்க மே மாதத்திற்கான சத்துணவு பொருட்களை உலர் உணவு பொருட்களாக வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்காக 16 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசியும், 5200 மெட்ரிக் டன் பருப்பும் கொள்முதல் செய்யப்பட்டு அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், பள்ளி மற்றும் வகுப்பு வாரியாக உலர் உணவு பொருட்கள் வழங்கப்படுவதற்கான நாள் மற்றும் நேரத்தை மாவட்ட ஆட்சியர்கள் விளம்பரப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.