தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை எட்டும் அளவுக்கு நெருங்கி உள்ளது. இதுவரை இல்லாத அளவில், ஒரே நாளில் அதிகபட்சமாக 4 ஆயிரத்து 343 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது.
8 - வது நாளாக, தமிழகத்தில் 3 ஆயிரத்து 500 பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு நீடித்து, புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இதுவரை இல்லாத வகையில் புதிதாக 4 ஆயிரத்து 343 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி, கொரோனோவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கி உள்ளது.
ஒரே நாளில் அதிகபட்சமாக 57 பேர், கொரோனாவுக்கு பலி ஆகி உள்ளனர். இவர்களில் மதுரையைச் சேர்ந்த 35 வயது பெண், சென்னையில் 93 வயது பெண் உள்பட மொத்தம் 20 பேர், தனியார் மருத்துவமனைகளில் மரணம் அடைந்தனர்.
சென்னையில் 29 வயது இளைஞர், 31 வயது பெண் உள்பட மொத்தம் 37 பேர் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் உயிரிழந்தனர்.
தமிழகத்தில் 41 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதேநேரம், கடந்த 24 மணி நேரத்தில், சுமார் 3 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ் செய்யப் பட்டதால் தமிழகத்தில் குணம் அடைந்து வீடு திரும்பி யோரின் எண்ணிக்கை சுமார் 56 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக, ஒரே நாளில் 33 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா பரி சோத னை நடத்தப்பட்டதாக மருத்துவ அறிக்கையில் தெரிவித்துள்ள தமிழக சுகா தாரத்துறை, இதுவரை மொத்தம் 12 லட்சத்து 36 ஆயிரம் பேருக்கு மேல், பரிசோதனை நடத்தி முடித்து இருப்பதாக விளக்கம் அளித்துள்ளது.
தமிழகத்தில் அரியலூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்கள் தவிர, எஞ்சிய அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் தொற்று பதிவாகி இருந்தது.