உலகளவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவும் நகரங்களில் லாஸ்ஏஞ்சல்ஸ் நகருக்கு அடுத்த இடத்தில் சென்னை உள்ளது. ஜூன் 30- ந் தேதி சென்னையில் 2,393 பேருக்கு தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இதே நாளில், டெல்லியில் 2,199 பேருக்குத்தான் தொற்று ஏற்பட்டது. சென்னையில் மார்ச் 9 - ந் தேதி முதல் கொரோனா நோயாளி கண்டுபிடிக்கப்பட்டார். மார்ச் மாதத்தில் கொரோனா பரவல் குறைவாகவே இருந்தது. ஏப்ரல் மாதத்தில் தொற்று வேகமாக பரவத் தொடங்கியது.
தற்போது, இந்தியாவின் மற்ற நகரங்களை காட்டிலும் சென்னையில்தான் கொரோனா வேகமாக பரவி வருகிறது. ஜூன் 30 - ந் தேதி முதல் இந்தியாவிலேயே அதிக தொற்று ஏற்படும் நகரமாக சென்னை மாறியுள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக டெல்லி, தானே, புனே, மும்பை, ஹைதரபாத், பெங்களுரு, கௌகாத்தி, பால்கர், ராய்கட் நகரங்கள் உள்ளன.
உலகளவில் லாஸ்ஏஞ்சல்ஸ், சென்னை, சாண்டியாகோ, டெல்லி, சா பாலோ, தானே , மியாமி, பியூனஸ்அயர்ஸ், சல்வாடர், லிமா ஆகிய நகரங்கள் கொரோனா தொற்று அதிகம் பரவும் நகரங்களாக உள்ளன.
ஒட்டு மொத்தமாக சென்னையிலும் தமிழகத்திலும் சோதனை கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஜூன் மாதத்தில் சோதனைகளை இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் 10 லட்சத்துக்கும் அதிகமான சோதனை நடத்தப்பட்டுள்ளது. மற்ற எந்த மாநிலங்களை விட அதிகம். அதனால்,எண்ணிக்கை அதிகமாக தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் ஏப்ரல் மே மாதங்களில் கொரோனா தொற்று அதிகமாக பரவும் நகரமாக மும்பை இருந்தது. ஜூன் மாதத்தில் டெல்லி அதிக தொற்றுக்குள்ள நகரமானது. தற்போது, ,சென்னை அந்த இடத்தை பிடித்துள்ளது.ஜூலை மாதத்தில் சென்னை மக்கள் கடும் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியமாகிறது.