ஜெயராஜ் மற்றும் பென்னிக்சை சாத்தான்குளத்தில் காவல் ஆய்வாளராக இருந்த ஸ்ரீதர் அடிக்குமாறு கூறியதாகவும் உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் லத்தியால் அடித்ததாகவும் அங்கு தலைமை காவலராக உள்ள ரேவதி கூறுவது போன்ற செல்போன் உரையாடல் வெளியாகியுள்ளது.
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் விசாரணை நடத்திய கோவில்பட்டி மாஜிஸ்திரேட்டிடம் அங்கு தலைமை காவலராக பணியாற்றிய ரேவதி, தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்சை போலீசார் லத்தியால் தாக்கியதாக சாட்சி அளித்திருந்தார். இந்த நிலையில் காவலர் ரேவதி, இளைஞர் ஒருவரிடம் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் காவல் நிலையத்தில் இருந்த போது நடந்த சம்பவத்தை கூறுவது போன்ற செல்போன் உரையாடல் வெளியாகியுள்ளது.
மேலும் காவல் நிலையத்தில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்சிற்கு என்ன நேர்ந்தது என அவரது உறவினர் ஒருவர் அளித்த பேட்டியில் கூறிய அனைத்தும் உண்மை என்றும் காவலர் ரேவதி தெரிவிப்பது போன்றும் உரையாடலில் ஆடியோ இடம்பெற்றுள்ளது.