சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் கிராமப்புற கோவில்கள் இன்று பக்தர்கள் வழிபடத் திறக்கப்பட்டன. தொழில் நிறுவனங்கள் 100 சதவீதப் பணியாளர்களுடன் செயல்பட உள்ளன.
கொரோனா பரவலைத் தடுக்க இம்மாத 31ம் வரை பொதுமுடக்கத்தை நீட்டித்து தமிழக அரசு நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இருப்பினும், சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்கள் தவிர மற்ற பகுதிகளில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி கிராமப்புறங்களில் உள்ள சிறிய வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டு இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இதனால், 100 நாட்களுக்குப் பிறகு கோவில்களுக்கு சென்று பக்தர்கள் வழிபட்டனர்
தொழில் நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் இன்று முதல் 100 விழுக்காடு பணியாளர்களுடன் இயங்க உள்ளன. முழு அளவில் பணியாளர்களை ஈடுபடுத்த தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் தயாராகி வருகின்றன.