செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

கடந்த ஆண்டு இதே நாள்.. காட்சியளித்த அத்திவரதர்! குலுங்கிய காஞ்சி

Jul 01, 2020 08:33:22 AM

தமிகத்தின் இளையதலைமுறைக்கு இப்படியொரு  பிரமாண்ட வைபவம் தமிழ்நாட்டில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் என்பதே தெரியாது... அதுதான் அத்திவரதர் வைபவம். கோயில் நகரமான காஞ்சிபுரத்திலுள்ள வரதராஜர் கோயில் ஆனந்தரசரஸ் தீர்த்த குளத்திலிருந்து ஜுன் 28- ந் தேதி அதிகாலை 2.45 மணிக்கு 40 ஆண்டுகளுக்குப் பிறகு, அத்திவரதர் வெளியே எடுக்கப்பட்டார். வரதராஜர் கோயிலில் உள்ள மண்டபத்தில் வைக்கப்பட்ட அத்திவரதருக்கு  சிறப்பு பூஜைகள் அலங்காரங்கள் செய்யப்பட்டன. பின்னர்,   ஜூலை 1- ந் தேதி முதல் பக்தர்களுக்கு அத்திவரதர் அருள்பாலிக்கத் தொடங்கினார். வரதராஜர் கோயிலில் 48 நாள்கள் அத்திவரதர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  இந்த 48 நாள்களும் காஞ்சிபுரமே விழாக் கோலம் பூண்டிருந்தது. முதல் 31 நாள்கள் சயன கோலத்தில் அருள்பாலித்த அத்திவரதர் ஆகஸ்ட் 1-ந் தேதி முதல் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். 

தொடர்ந்து 17 நாள்களுக்கு பிறகு, ஆனந்தசரஸ் கோயிலில் மீண்டும் தண்ணீருக்குள் உள்ள சுரங்கப்பகுதியில் ஸ்தாபிக்கப்பட்டார். நாட்டின் பல இடங்களிலிருந்து தினமும் லட்சக்கணக்கான மக்கள் அத்திவரதரை வழிபட பக்தர்கள் குவிந்தனர். இந்த 48 நாள்களும் வெளியூர் பக்தர்களுக்கு காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரையும் அதற்கு பிறகு உள்ளுர் பக்தர்களுக்கும் அத்திவரதர் அருள்பாலித்தார். தமிழகத்தில் முக்கிய அரசியல்வாதிகளும் கூட பாஸ் பெற்று அத்திவரதரை தரிசித்தனர்.தமிழகம் மட்டுமல்லாமல் பக்கத்து மாநிலங்களிலிருந்து பக்தர்கள் காஞ்சிக்கு வந்த வண்ணம் இருந்தனர். இந்த 48 நாள்களில் 1.4 கோடி மக்ககள் அத்திவரதரை வழிபட்டனர்.காணிக்கையாக மட்டும் ரூ.8 கோடியை பக்தர்கள் வழங்கினர்.

காஞ்சிபுரத்தில் பாதுகாப்புக்காக கிட்டத்தட்ட7,000 போலீஸார் குவிக்கப்பட்டனர். பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் தரப்பில் பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டன. தமிழக அரசு போக்குவரத்துத்துறை பல நகரங்களிலிருந்து காஞ்சிக்கு சிறப்பு பேருந்துகளை இயக்கியது. ஆகஸ்ட் 17- ந் தேதி ஆனந்தரசரஸ் குளத்துக்குள் அத்திவரதர் ஸ்தாபிக்கப்பட்டதையடுத்து, வைபவம் முடிவுக்கு வந்தது. அத்தி மரத்தில் உருவானவர் என்பதால் அத்திவரதர் என்று இவர் அழைக்கப்படுகிறார்.அத்திவரதர் வைபவத்தின் நினைவாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 204 இடங்களில் 40,000 அத்தி மரக்கன்றுகள் நடப்பட்டன. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அத்திவரதர் வைபவத்தின் நினைவு மண்டபமும் கட்டப்பட்டுள்ளது.

17-ம் நூற்றாண்டின் இறுதி காலத்தில் தமிழகத்தில் பல இடங்களில் அந்தியர்களின் படையெடுப்பு நிகழ்ந்தது. இறைவனின் விக்ரகங்களைச் சேதப்படுத்திவிடாமல், பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அப்போது இறைத் திருமேனிகளை நீர்நிலைகளில் மறைத்தும் மண்ணில் புதைத்தும் மக்கள் பாதுகாத்தனர். அந்த வகையில், அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டு 40 ஆண்டுகள் கழித்து வெளியே எடுக்கப்பட்டவர்தான். அத்திவரதர். பிறகு 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதரை வெளியே எடுத்து தரிசனத்திற்கு வைக்கப்படும் சம்பிரதாயம் உருவாக்கப்பட்டது. இதற்கு முன்னதாக 1979-ம் ஆண்டு அத்திவரதர் வெளியே எடுக்கப்பட்டார். அடுத்ததாக 2059- ம் ஆண்டு ஜூலை 1- ந் தேதி அத்திவரதர் மீண்டும் மக்களுக்கு தரிசனம் தருவார்.


Advertisement
பயணியர் நிழற்குடை மீது உரசி விபத்துக்குள்ளான அரசுப் பேருந்து.. ஓட்டுநர் தூக்கக் கலக்கத்தில் இருந்ததால் நேரிட்ட விபரீதம்..!
கிராம சபைக் கூட்டத்தில் தட்டிக்கேட்ட இளைஞர் மீது தாக்குதல்... ஊர் தலைவருக்கு போலீஸ் வலை
கோழிக்காகக் கொல்லப்பட்ட முதியவர்.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு போலீஸ் வலை வீச்சு
மாணவர்களுக்குக் கஞ்சா விற்பனை.. விடுதியில் அறை எடுத்துத் தங்கி கஞ்சா விற்ற கும்பலை கைது செய்த போலீஸ்
பனியன் உற்பத்தியாளர்களை ஏமாற்றி கோடிக்கணக்கில் மோசடி செய்த ஆசாமியைப் பிடித்து போலீசில் ஒப்படைத்த உற்பத்தியாளர்கள்
கிராம சபைக் கூட்டத்தில் தலைவர்-துணைத்தலைவர் வாக்குவாதம்.. நிதியைப் பிரிப்பது மற்றும் முந்தைய ஊழல்கள் குறித்து மாறிமாறி குற்றச்சாட்டு
ஆளுக்கொரு ஆட்டம்.. ஐயப்ப சாமியை இசைவாணி இழிவுபடுத்தினாரா ? போலீசில் பரபரப்பு புகார்
காதலியைப் பார்ப்பதற்காக காத்திருந்த போது, திடீரென வந்த காதலியின் தங்கையிடம் சில்மிஷம் செய்த காதலன்
மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி
தஞ்சாவூர் தமிழ் பல்கலை.யில் முறைகேடுக்கான ஆதாரம் இல்லை

Advertisement
Posted Nov 24, 2024 in இந்தியா,அரசியல்,Big Stories,

மராத்தா பெருமையை கையில் எடுத்த பா.ஜ.க.. திருப்புமுனை தந்த அன்பு சகோதரிகள் திட்டம்.. ஆட்சியை தக்க வைத்த மகாயுதி கூட்டணி

Posted Nov 24, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஆளுக்கொரு ஆட்டம்.. ஐயப்ப சாமியை இசைவாணி இழிவுபடுத்தினாரா ? போலீசில் பரபரப்பு புகார்

Posted Nov 24, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

வெடித்துச் சிதறியது காதலியின் கைகள்..! தோழிக்கு ஹேர்டிரையர் வெடிகுண்டு பார்சலில் அனுப்பி வைத்தது ஏன் ? வில்லங்கம் வீடு தேடி வந்த பின்னணி

Posted Nov 22, 2024 in இந்தியா,Big Stories,

அதானி குழுமத்தின் மீது அமெரிக்கா பகீர் புகார்.. அதிகாரிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி லஞ்சம்? ப்ரூக்ளின் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு..

Posted Nov 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சினிமா பாணியில் கொலை.. ஆட்டோ குணாவை ஊசியால் ஆப் செய்த திருநங்கைகள்..! வாசலில் காவல் காத்த மனைவி..


Advertisement