சாத்தான்குளம் காவல் நிலைய பொறுப்பாளர்களாக ஒரு வட்டாட்சியர் மற்றும் துணை வட்டாட்சியர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுரையின்படி, தேர்தல் துணை வட்டாட்சியராக பணிபுரிந்து வரும் சுவாமிநாதன் என்பவரை, சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நிர்வாக நடுவர் பணி மேற்கொள்ள, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல, சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நிர்வாக நடுவர் பணி மேற்கொள்ள, தனிவட்டாட்சியர் செந்தூர் ராஜன் என்பவரையும் நியமித்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இவர்கள் இருவரும், மறுஉத்தரவு வரும் வரை, சுழற்சி முறையில் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் நிர்வாக நடுவர் பணி மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தலின்படி, சாத்தான்குளம் காவல்நிலையத்தை வருவாய்த்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கையாக, பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.