ரயில்கள் ரத்தானதால் டிக்கெட் முன்பதிவு செய்திருந்த சுமார் எட்டு லட்சம் பயணியருக்கு, 44 கோடியே 50 லட்சம் ரூபாய் திரும்ப வழங்கப்பட்டதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட்கள் ரத்தானால் அதன் கட்டணத்தை ரீபண்ட் பெற, பயண தேதியிலிருந்து 6 மாதம் வரை அவகாசம் உள்ளது. அதன்படி கடந்த மே மாதம் 22ம் தேதி முதல், கடந்த 28ம் தேதி வரையில் ரத்தான டிக்கெட்டுகளின் கட்டணம் திரும்ப வழங்கப்பட்டுள்ளது.
இதில் தமிழகத்தில் மட்டும் சுமார் 28 கோடி ரூபாய் பயணியருக்கு திரும்ப வழங்கப்பட்டு உள்ளது. அதில், சென்னை ரயில்வே கோட்டத்தில் 12 கோடியே 83 லட்சமும், மதுரையில் 4 கோடியே 39 லட்சமும், சேலத்தில் 6 கோடியே 62 லட்சமும், திருச்சியில் 4 கோடியே 20 லட்ச ரூபாயும் அடங்கும்.