சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை சுமார் 56 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சென்னையில் 2 ஆயிரத்து 167 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி ஆனது.
அண்டை மாவட்டங்களான செங்கல்பட்டில் புதிதாக 187 பேரும், திருவள்ளூரில் 154 பேரும், காஞ்சிபுரத்தில் 75 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
மதுரையில் 303 , வேலூரில் 144, திருச்சியில் 87, விருதுநகரில் 77 , கள்ளக் குறிச்சியில் 68, கோவையில் 65, திண்டுக்கல்லில் 64, ராமநாதபுரம் மற்றும் தேனியில் தலா 61 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதி ஆகியுள்ளது.
கொரோனா வுக்கு உயிரிழந்த ஆயிரத்து 141 பேரில், 846 பேர், சென்னையை ச் சேர்ந்தவர்கள் என்றும், சென்னை யில் மட்டும் ஓரே நாளில் 37 பேர், கொரோனாவுக்கு பலி ஆகி இருப்பதாகவும், தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.