சாத்தான்குளம் சம்பவம் தொடர்பான வழக்கு, நீதிமன்ற அனுமதி பெற்று, சிபிஐ வசம் ஒப்படைக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் தலைவாசலில், ஆசியாவிலேயே மிகப்பெரிய அளவில் உருவாகி வரும் கால்நடை பூங்காவின் கட்டிடப் பணிகளை முதல மைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சாத்தான்குளம் சம்பவம் தொடர்பான வழக்கு, நீதிமன்ற அனுமதி பெற்று, சிபிஐ வசம் ஒப்படைக்கப்படும் என அறிவித்தார்.
தேவையில்லாமல் பொதுமக்களை தொந்தரவு செய்யக்கூடாது என போலீசாருக்கு அறிவுறுத்தி உள்ளதாக கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தபோது எடப்பாடி பழனி
சாமி தெரிவித்தார். முழு ஊரடங்கு நீட்டிப்பு குறித்து நாளை முடிவு செய்யப்படும் என்று அவர் கூறினார்.
கொரோனா விவகாரத்தில் எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின், தேவை இல்லாமல் தமிழக அரசை குறை கூறி வருவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
தலைவாசல் கால்நடைப் பூங்காவில் நாட்டின மாடுகள், நாய்கள் மற்றும் கால்நடைகளை அழியாமல் பாதுகாக்க, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்தார்.