காவல்துறையினருக்கு பால் விநியோகம் செய்வதில்லை என்ற முடிவை திரும்ப பெறுவதாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்த சங்க நிறுவனரும், மாநில தலைவருமான பொன்னுசாமி வெளியிட்ட அறிக்கையில், பால் முகவர்களுக்கு காவல்துறையினர் தரப்பில் இருந்து பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டது உள்ளிட்ட காரணங்களினால் காவல்துறையினருக்கு பால் விநியோகம் செய்வதில்லை என்கிற முடிவை நேற்று காலை வெளியிட்டதாகவும், சென்னை பெருநகர காவல் ஆணையரை தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தொலைபேசியில் தொடர்பு கொண்டு தமிழகம் முழுவதும் பால் முகவர்கள் சந்தித்து வரும் பிரச்சினைகள் குறித்து பேசியதின் அடிப்படையில் சுமூக தீர்வு எட்டப்பட்டுள்ளதால், காவல்துறையினருக்கு பால் விநியோகம் இல்லை என்கிற முடிவை திரும்ப பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.