கொரோனா பணிக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும் நன்கொடை விவரங்கள் எதையும் மறைக்காமல் அவ்வப்போது வெளியிட்டு வரு வதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
நன்கொடை தொகை மற்றும் பயனாளிகள் விவரம் உள்ளிட்ட முழு தகவல்களும் அரசின்இணை யதளத்தில் இடம் பெறவில்லை என கூறி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் கற்பகம் என்பவர், வழக்கு தொடுத்திருந்தார்.
இதற்கு பதில் மனு தாக்கல் செய்த அரசின் நிதித்துறை துணை செயலாளர் பரிமளா செல்வி, இணைய தளத்தில் வெளிப்படைத்தன்மையுடன் முழு விவரங் களையும் இடம் பெறச் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
இந்த நிதி, மாநில பேரிடர் மேலாண்மை நிர்வாகத்திற்கு மாற் றம் செய்யப் பட்டு, பொது சுகாதார மேம்பாட்டுக்கு பயன்படுத்தப்பட்டு வருவதாக வும், பரிமளா செல்வி விளக்கம் அளித்துள்ளார்.