கொரோனா தடுப்பு பணிகளுக்காக தமிழகத்திற்கு 6 ஆயிரத்து 600 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மத்தியில் 2வது முறையாக பாஜக ஆட்சி அமைத்ததன் ஓராண்டு நிறைவை ஒட்டி, பிரதமர் மோடி தலைமையிலான அரசின் ஓராண்டு சாதனைகள் குறித்து காணொலி மூலம் டெல்லியில் இருந்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போது சிறு குறு நிறுவனங்களின் தொழில் முடங்காமல் இருக்க தமிழகத்தில் மட்டும் ஜூன் 11ம் தேதி வரை 1,937 கோடி ரூபாய் கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது என்றார்.
இதன் மூலம் 47 ஆயிரம் சிறு குறு நிறுவனங்கள் பலனடைந்திருப்பதாகவும் தெரிவித்தார். வேலை வாய்ப்பை அதிகரிக்க 2019-20 ஆண்டில் தமிழகத்தில் மட்டும் 5,103 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.