மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள கடைசி கதவணையை வந்தடைந்த காவேரி நீரை விவசாயிகள் மலர் தூவி வரவேற்றனர்.
குடகு மலையில் உருவாகும் காவேரி ஆறு பூம்புகாரில் உள்ள கடலில் ககலக்கிறது. அதற்கு முன்னர் சீர்காழி அருகேவுள்ள மேலையூர் கிராமத்தில் இருக்கும் கடைசி கதவணையில் தேக்கி வைக்கப்பட்டு பாசன ஆறுகள் மற்றும் கிளை வாய்க்கால்களுக்கும், பெருந்தோட்டம் ஏரிக்கும் திறக்கப்படும்.
இந்நிலையில் கடந்த 12 ம் தேதி மேட்டூரில் திறக்கபட்ட தண்ணீர் இன்று கடைசி கதவணையை வந்தடைந்தது. அப்போது அங்கு காத்திருந்த விவசாயிகளும், மக்களும் பூஜை செய்து காவேரி நீரை வரவேற்றனர்.
மேலும் முறை வைக்காமல் தொடர்ந்து தண்ணீர் வழங்கவும்,சம்பா சாகுபடிக்கான உழவு மானிய திட்டத்தை அறிவிக்க வேண்டுமெனவும் தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.