சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, தூத்துக்குடிக்கு செல்லும் விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இதைதொடர்ந்து, மதுரை மாவட்டத்திலும் இன்று நள்ளிரவு முதல் வரும் 30ம் தேதி வரையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில், சென்னையில் இருந்து மதுரைக்கு செல்லும் 4 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோல், திருச்சி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கான விமான சேவையும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.