செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

ஓசி பிரியாணியும் கொஞ்சிய கொரோனாவும்..! Birthday பார்ட்டி பரிதாபங்கள்

Jun 23, 2020 07:04:00 AM

கும்மிடிப்பூண்டியில் 500 பேரை கூட்டி பிரியாணி விருந்து வைத்து பிறந்த நாள் கொண்டாடிய ரியல் எஸ்டேட் அதிபர் உள்ளிட்ட 15 பேருக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அதில் பங்கெடுத்தவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். நோய் தொற்றை பரப்பியதாக 50 பேர் மீது பாய்ந்த வழக்கின் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு... 

கும்மிடிப்பூண்டி ஒன்றியகுழு தலைவராக உள்ள ரியல் எஸ்டேட் அதிபர் குணசேகர் என்பவர் தான் ஊரடங்கை மீறி பிறந்த நாள் விருந்து வைத்து கொரோனாவை பரிமாறிய குற்றச்சாட்டுக்குள்ளனவர்..!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை சேர்ந்த குணசேகர் திமுகவின் பொதுக்குழு உறுப்பினராக உள்ளார். இவர் இரு தினங்களுக்கு முன்பு தனது 50 வது பிறந்த நாளை ஆதரவாளர்களுடன் வெகு விமரிசையாக மாந்தோப்பு ஒன்றில் உற்சாகமாக கொண்டாடினார்.

பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற 500க்கும் மேற்பட்டோருக்கு மது விருந்துடன் சிக்கன் மற்றும் மட்டன் பிரியாணி தட்டு தட்டாக பரிமாறப்பட்டது..!

இந்த விருந்தில் பங்கேற்ற பெரும்பாலானவர்கள் முககவசம் இல்லாமலும் சமூக இடைவெளி இல்லாமலும் காணப்பட்டனர். உள்ளூர் அரசியல் பிரபலங்கள், அதிகாரிகள் முதல் உள்ளூர் மக்கள் வரை ஏராளமானோர் கும்பலாக பங்கேற்று குணசேகரின் பிறந்த நாள் விழாவை சிறப்பித்தனர்.

இந்த விழா முடிந்த மறு நாள் காய்ச்சல் காரணமாக பர்த்டே பேபி குணசேகர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில் இரு தினங்கள் கடந்த நிலையில், குணசேகருக்கும், அந்த விழாவில் பங்கேற்ற பி.டி.ஓ ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. அதன் தொடர்ச்சியாக லேசான அறி,குறிகளுடன் மருத்துவமனைகளுக்கு சென்று பரிசோதித்து கொண்டவர்கள் என மொத்தமாக இதுவரை 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது.

இதனால் குணசேகரின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்று பிரியாணியை ஒரு பிடி பிடித்த பலரும், தற்போது கொரோனா பிடியில் சிக்கி இருக்கிறோமா ? என்ற கலக்கத்தில் உள்ளனர். பிறந்த நாள் விழாவில் பங்கேற்றவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இதையடுத்து கொரோனோ நோய்தொற்றை பரப்பியதாக குணசேகர் உள்பட 50 பேர் மீது ஆரம்பாக்கம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தையும் அந்த மாந்தோப்பையும் இழுத்து பூட்டியுள்ளனர். அங்கு கிருமி நாசினி தெளிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஊரடங்கை மீறி கும்பலாக சேர்ந்து பிறந்த நாள் கொண்டாடியதன் விளைவு, அவர்களுக்கு கொரோனா பரிசாக கிடைத்திருக்கிறது என்று எச்சரிக்கும் காவல்துறையினர், அரசின் அறிவுருத்தலை ஏற்று அனாவசியமாக வெளியில் சுற்றுவதை தவிர்த்து வீட்டில் இருப்பது அவர்களுக்கு மட்டுமல்ல சுற்றி இருப்போருக்கும் நல்லது என்கின்றனர்.


Advertisement
திருச்சியில் அளவுக்கு அதிகமாக லோடு ஏற்றி வந்த லாரி பாரம் தாங்காமல் கவிழ்ந்து விபத்து
கோவையில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்த தலைமைச் செயலாளர்
காட்டுக்குள் பதுங்கி பெண்கள் வேட்டை காமுகன் கால் உடைந்தது..! சீரியல் ரேப்பிஸ்ட் சிக்கியது எப்படி ?
திருப்பூரில் கால்நடை மருந்தகத்தில் மோதலை தொடர்ந்து இருதரப்பினர் மீது வழக்குப்பதிவு
கல்லூரி பேருந்து சாலையோர மரத்தில் மோதி விபத்து ..
தேனீக்கள் வளர்ப்பது இவ்வளவு சுலபமா..? மாதம் ரூ.50 ஆயிரம் லாபம்..! ஒரு நாள் பயிற்சி தர்ராங்க..
மூடப்படாத குடிநீர் பைப் பள்ளம் - விபத்தில் சிக்கி பச்சிளம் குழந்தை உயிரிழப்பு.
கை கொடுக்கும் காளான் வளர்ப்பு.. வாய்ப்பை வழங்கும் வேளாண் பல்கலை..
மதுரையில் மங்கி குல்லா கொள்ளையர்கள் கைவரிசை - சி.சி.டி.வி காட்சி வெளியீடு
புத்தக வெளியீட்டு விழாவில் விஜயுடன் பங்கேற்பது குறித்து ஆலோசித்து முடிவு - திருமா

Advertisement
Posted Nov 06, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

காட்டுக்குள் பதுங்கி பெண்கள் வேட்டை காமுகன் கால் உடைந்தது..! சீரியல் ரேப்பிஸ்ட் சிக்கியது எப்படி ?

Posted Nov 05, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தேனீக்கள் வளர்ப்பது இவ்வளவு சுலபமா..? மாதம் ரூ.50 ஆயிரம் லாபம்..! ஒரு நாள் பயிற்சி தர்ராங்க..

Posted Nov 05, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கை கொடுக்கும் காளான் வளர்ப்பு.. வாய்ப்பை வழங்கும் வேளாண் பல்கலை..

Posted Nov 05, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

50 கிராம் நகைக்காக மூதாட்டியை கொன்று டிராலியில் அடைத்த குடும்பம்..! நெல்லூர் டூ மீஞ்சூர் ரெயில் திகில்..

Posted Nov 05, 2024 in Big Stories,

மாடியில தொட்டிக் கட்டி“காய்கறி தோட்டம் ”நகரத்து பெண் விவசாயி..! வாங்க நாமும் தோட்டம் அமைக்கலாம்


Advertisement