தமிழகத்தில், ஒரே நாளில் ஆயிரத்து 358 பேர் குணம் அடைந்து, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதால், இதுவரை 34 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடு திரும்பி உள்ளனர். திருவண்ணாமலை, மதுரை மற்றும் கடலூர் மாவட்டங்களில், கொரோனா பாதிப்பு, கணிசமாக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, 62 ஆயிரத்தைத் தாண்டிய நிலையில், சென்னையில் மட்டும் வைரஸ் தொற்று உறுதி ஆனோர் எண்ணிக்கை 43 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் ஆயிரத்து 487 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனது.
சென்னையின் அருகாமை மாவட்டங்களான செங்கல் பட்டில் 126 பேரும், திருவள்ளூரில் புதிதாக 120 பேரும் கொரோனாவால் பாதிக்கப் பட்டனர். காஞ்சிபுரத்தில் 56 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி, கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்து 215 ஆக அதிகரித்தது.
இதுதவிர, திருவண்ணாமலையில் 139 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி, அங்கு பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்து 199 ஆக உயர்ந்தது.
மதுரையில் - 157 , கடலூரில் - 63, ராணிப்பேட்டையில் - 52, தூத்துக்குடியில் - 51 மற்றும் விழுப்புரத்தில் புதிதாக 41 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதி ஆனது.
தமிழகத்தில் நீண்ட இடைவெளிக்குப்பின், அனைத்து மாவட்டங்களிலும்கொரோனா பாதிப்பு, பதிவாகி இருந்தது.
தமிழகத்தில் ஒரே நாளில் 37 பேர், கொரோனாவுக்கு பலி ஆயினர்.
33 வயது பெண் உள்பட 7 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 33 வயது ஆண் ஒருவர், 6 பெண்கள் உள்பட மொத்தம் 30 பேர், பல்வேறு அரசு மருத்துவமனைகளில் இறந்தனர்.
கொரோனாவுக்கு உயிரிழந்த 794 பேரில், 623 பேர், சென்னை யைச் சேர்ந்தவர்கள். சென்னையில் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வர, இதுவரை சுமார் 24 ஆயிரம் பேர் வரை, குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தெரி வித்துள்ளது.