தமிழகத்தில் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் ஒரேநாடு, ஒரே ரேசன் கார்டு திட்டம் அமல்படுத்தப்படும் என மத்திய அரசிடம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் காமராஜ் கூறினார்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண்களுக்கான மானியவிலை இருசக்கர வாகனங்கள், மாற்றுதிறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள், முதியோர் உதவித்தொகை உள்ளிட்டவற்றை அமைச்சர் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகம் முழுவதும் இயங்கி வரும் 512 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் வாயிலாக 24லட்சத்து 70 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.