ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையிலிருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நதிநீரானது, பூண்டி ஏரிக்கு ஒரே தவணையாக 8 டி.எம்.சி. தண்ணீராக வந்து சேர்ந்தது.
இரு மாநிலங்களுக்கு இடையேயான ஒப்பந்தத்தின்படி, ஆந்திர அரசு ஆண்டுதோறும் தமிழகத்திற்கு 12 டி.எம்.சி தண்ணீர் வழங்க வேண்டும். அதன்படி, கடந்த செப்டம்பர் மாதம் கண்டலேறு அணை திறக்கப்பட்ட நிலையில், நேற்று காலை வரையில் 8 புள்ளி 04 டி.எம்.சி தண்ணீர் பூண்டி ஏரியை வந்தடைந்தது. இது ஒரே தவணையில் கிருஷ்ணா நதியில் இருந்து தமிழகத்திற்கு வந்த, அதிகபட்ச நீரின் அளவு என்ற புதிய சாதனையாக பதிவாகியுள்ளது.