தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில், ஒரே நாளில் கொரோனா வுக்கு, 53 பேர் உயிரிழந்துள்ளனர். 5- வது நாளாக, 2 ஆயிரம் பேருக்கு மேல், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழகத்தில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2 ஆயிரத்து 532 பேரு க்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 59 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
5- வது நாளாக, 2 ஆயிரம் பேருக்கு மேல், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதுவரை இல்லாத அளவில், கொரோனாவுக்கு, ஒரே நாளில் 53 பேர் பலி ஆனார்கள். இவர்களில் 6 பெண்கள் உள்பட 16 பேர் தனியார் மருத்துவ மனைகளில் இறந்தனர். சென்னையைச் சேர்ந்த 40 வயது பெண் , விழுப்புரத்தில் 40 வயது ஆண் உள்பட மொத்தம் 37 பேர் அரசு மருத்துவமனைகளில் உயிரிழந்தனர்.
கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 438 பேர், டிஸ்சார்ஜ் செய்யப் பட்டதால், இதுவரை குணம் அடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக் கை 32 ஆயிரத்தை தாண்டி விட்டது. அதேநேரம், பல்வேறு மருத்துவ மனைகளில் சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
ஒரே நாளில், அதிகபட்சமாக 31 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாகவும், இதுவரை 8 லட்சத்து 92 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை நடத்தி முடிக்கப்பட்டு உள்ளதாகவும் சுகாதாரத்துறை, மாலையில் வெளியிட்ட செய்திக்குறிப் பில் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மட்டும் ஒருவருக்கு கூட, வைரஸ் தொற்று உறுதி ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
class="twitter-tweet">#BREAKING || தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில்இன்று 53 பேர் ஒரே நாளில் பலி #Coronavirus | #COVID19 pic.twitter.com/T1c6rNl2T2
— Polimer News (@polimernews) June 21, 2020