ஊரடங்கு காலத்தில் கட்டணம் செலுத்த வற்புறுத்தும் தனியார் பள்ளி கல்லூரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரிச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கில் தனியார் பள்ளி, கல்லூரிகள் கட்டணம் பெறக் கூடாது என மத்திய மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளது மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. கட்டணங்களைச் செலுத்தும்படி தனியார் பள்ளி கல்லூரிகள் நெருக்குவது குறித்துப் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனுவில் தெரிவித்துள்ளார்.
தனியார் பள்ளி, கல்லூரிகள் அதிகக் கட்டணத்தைச் செலுத்தக் கூறுவதாகவும், அதனால் கட்டண விவரங்களை இணையத்தளத்தில் பதிவேற்றவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.