தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம் என்கிற இணையத்தளத்தையும், பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான இணையத்தளப் பயிற்சி வகுப்பையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடக்கி வைத்துள்ளார்.
தமிழ்நாட்டில் வேலை தேடும் இளைஞர்களையும், வேலை அளிக்கும் தனியார் நிறுவனங்களையும் இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம் http://www.tnprivatejobs.tn.gov.in/ என்கிற இணையத்தளத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னைத் தலைமைச் செயலகத்தில் தொடக்கி வைத்தார்.
இதேபோலப் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான இணையத்தளப் பயிற்சி வகுப்பையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடக்கி வைத்தார்.
இணையத்தளத்தில் கட்டணமில்லாப் பயிற்சியை வழங்கிட ஆம்பிசாப்ட் டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் பள்ளிக்கல்வித்துறை புரிந்துணர்வு உடன்பாடு செய்துள்ளது. இந்தப் பயிற்சியைப் பெற இதுவரை ஏழாயிரத்து 420 மாணாக்கர்கள் பதிவு செய்துள்ளனர்.