தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை நடைபெறுகிறது.
சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நாளை பகல் 12 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது.
ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து அளித்த பரிந்துரையின் படி, நீட் தேர்வில் வெற்றி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10% உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்தும் நாளையக் கூட்டத்தில் ஆலோசித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் கொரோனா தாக்கத்தால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பை சீர் செய்ய புதிய தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் துவங்க முதலமைச்சர் அழைப்பு விடுத்திருந்த நிலையில், அது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது.