நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை சுற்றுவட்டாரத்தில் பயிரிடப்பட்டுள்ள மிளகு கொடிகளை வெட்டுக்கிளிகள் கூட்டம் கூட்டமாக பதம் பார்த்து வருவதால், இதற்கு விரைவாக தீர்வு காண வேளாண் அதிகாரிகளுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொல்லிமல்லியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் மிளகு பயிரிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், வளப்பூர் நாடு அருகே இள மாத்திப்பட்டி என்ற இடத்தில் மிளகு தோட்டத்துக்குள் வெட்டுக்கிளிகள் புகுந்து கொடிகளை சேதப்படுத்தி வருகின்றனர்.
இவை, வடமாநிலத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய பாலைவன வெட்டுக்கிளியா அல்லது வேறு வகையா என்று வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.