செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை திறக்கப்பட்டது...

Jun 12, 2020 02:36:20 PM

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காகத் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தண்ணீரைத் திறந்து வைத்தார். கொள்ளிடம் ஆற்றில் ஆதனூர் குமாரமங்கலத்தில் புதிய கதவணையும், அணைக்கரையில் புதிய அணையும் கட்டத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார். 

மேட்டூர் அணைக்கு வந்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மாவட்ட ஆட்சித்தலைவர் ராமன், பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஆகியோர் வரவேற்றனர். அணையின் வலக்கரையில் உள்ள மேல்மட்ட மதகுகளை முதலமைச்சர் இயக்கிக் காவிரி டெல்டா பாசனத்திற்குத் தண்ணீர் திறந்து விட்டார்.

முதற்கட்டமாக நொடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் அணையில் இருந்து திறந்து விடப்பட்டது. திறந்து விடப்பட்ட தண்ணீரில் மலர்களைத் தூவிக் காவிரி அன்னைக்கு முதலமைச்சர் மரியாதை செய்தார்.

அதன் பின்னர் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, கருப்பண்ணன், சரோஜா ஆகியோரும் மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீரில் மலர்களைத் தூவி மரியாதை செய்தனர்.

2008 ஆண்டுக்குப் பிறகு 12ஆண்டுகள் கழித்து இப்போது தான் உரிய காலத்தில் குறுவை நெல் பயிரிடுவதற்காகத் தண்ணீர் திறக்ககப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து பாசன வசதி பெறும் 12 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அணையில் நீர் திறந்துவைத்த பின்னர் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, குறுவை சாகுபடிக்காக 90 நாட்கள் தண்ணீர் திறக்கப்படும் என்றும், இதனால் ஐந்தேகால் லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என்றும் தெரிவித்தார்.

மேட்டூர் அணையின் உபரி நீரை 100 ஏரிகளில் நிரப்பும் திட்டம் ஜனவரி இறுதிக்குள் முடிவடையும் எனத் தெரிவித்தார். மேட்டூர் அணைப் பூங்காவில் 25 கோடியே 50 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் தொங்கு பாலம் அமைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


Advertisement
மின் விளக்கு அலங்காரம், ராட்டினங்களுடன் கண்கவர் திருவிழா... 108அடி நீள அலகு குத்தி வந்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்
அண்டார்டிகாவின் மிக உயரமான வின்சன் சிகரத்தில் ஏறிய முதல் தமிழ் பெண்
உலக உருண்டையை தாங்கி நிற்கும் மர வடிவிலான மனிதன் !... கோவை ஆட்சியர் கிராந்திகுமார் சிலையை திறந்து வைத்தார்
கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு ஒளிரும் சென்னை விமான நிலையம்... பயணிகள் உற்சாகம்
ரகசிய தகவலின் பேரில், லாட்டரி சீட்டு விற்பனையாளர் கைது... ரூ. 2.25 கோடி ரொக்கம் மற்றும் லாட்டரி சீட்டுக் கட்டுகள் பறிமுதல்
மின்னொளியில் ஜொலிக்கும் தேவாலயங்கள்... மோப்ப நாய்களுடன் சோதனையிட்டு போலீசார் பாதுகாப்பு நடவடிக்கை
பேருந்து நிழற்குடை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள நேரில் ஆய்வு செய்தார் திருச்செங்கோடு எம்.எல்.ஏ. ஈஸ்வரன்... பெண் பொறியாளரை கடிந்துகொண்ட ஈஸ்வரன்
ரத்னகிரி அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் விபத்து... பைக் மீது கண்டெய்னர் லாரி மோதி கல்லூரி மாணவர்கள் உடல் நசுங்கி மரணம்
குடியிருப்புகளை சேதப்படுத்தி வந்த புல்லட் காட்டு யானை... டிரோன் கேமரா சத்தத்தை கேட்டு புல்லட் யானை புதருக்குள் சென்று மறையும் காட்சி
பெண்ணை தாக்கி கொன்ற சிறுத்தை கால்நடைகளையும் கடித்தது... 6ஆவது நாளாக ட்ரோன், ட்ராப் கேமராக்கள் மூலம் கண்காணிப்பு

Advertisement
Posted Dec 24, 2024 in தமிழ்நாடு,Big Stories,

எம்.ஜி.ஆர். 37 வது நினைவுதினம்

Posted Dec 24, 2024 in இந்தியா,Big Stories,

மரம் அறுக்கும் எந்திரத்தால் வீடு புகுந்து கழுத்தை அறுத்த “டெலிவரி டேஞ்சர் பாய்”..! தனியாக இருக்கும் பெண்களே உஷார்

Posted Dec 24, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ராமேஸ்வரத்தில் குளிக்கிறீங்களா.. உடை மாற்றும் அறையில் உஷார் இருட்டில் சிமிட்டிய 3 கண்கள் ..! ஐ.டி . பெண் பொறியாளர் தரமான சம்பவம்..!

Posted Dec 22, 2024 in வீடியோ,Big Stories,

ஒத்த ஆளு மொத்த உயிரையும் காத்துருக்கா.. அவள் எங்கள் தெய்வம்..! பேருந்தில் மின்சாரம் பாய்ந்தது எப்படி ?

Posted Dec 22, 2024 in வீடியோ,Big Stories,

அவரு ஆபீசரா இருக்கலாம்.. அதுக்காக மகளை கேட்பாரா ?.. ஜெயிலருக்கு செருப்படி ஏன் ? ஏறி மிதித்து சட்டையை கிழித்த சம்பவம்


Advertisement