தென் கொரியாவில் இருந்து மேலும் ஒரு லட்சம் பிசிஆர் கருவிகள் தமிழகம் வந்து சேர்ந்துள்ளன.
வைரஸ் தொற்று, தமிழகத்தில் புதிய உச்சத்தை தொட்டு உள்ளதால், கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே, இதற்கு கூடுதலாக பிசிஆர் கருவிகள் தேவை என்பதால், தென்கொரியாவில் இருந்து வாரம் ஒரு லட்சம் என்ற அளவில் பிசிஆர் கருவிகள் வரவழைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இதுவரை, சுமார் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட பிசிஆர் கருவிகள் தமிழகம் வந்து சேர்ந்து விட்டதாக தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் தெரிவித்துள்ளது.