தமிழகத்தில் கொரோனா உயிரிழப்புகளை சுகாதாரத்துறை மறைப்பதாக வெளியாகும் தகவல் தவறு என தெரிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் கொரோனா சமூகத் தொற்றாக மாறவில்லை எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சேலத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா உயிரிழப்பு தொடர்பான தகவல்களை மறைப்பதாக கூறப்படுவதில் உண்மை இல்லை எனத் தெரிவித்தார். கொரோனா உயிரிழப்பை எப்படி மறைக்க முடியும்? என்று கேள்வி எழுப்பியதோடு, உயிரிழப்புகளை மறைப்பதால் அரசுக்கு எந்த நன்மையும் இல்லை எனவும் கூறினார்.
அதுமட்டுமின்றி தமிழகம் முழுவதும் 3,300க்கும் மேற்பட்ட வெண்டிலேட்டர்கள் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்த முதலமைச்சர், சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் எங்குமே கொரோனா சமூகப் பரவலாக மாறவில்லை எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார்.