ரேசன் கடைகளில் விலையில்லா மாஸ்க் வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக தமிழகத்தில் ரேசன் கடைகள் மூலம் விலையில்லா மாஸ்க் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் அறிவித்திருந்தார்.
அதன்படி 2 கோடியே 8 லட்சத்து 23 ஆயிரத்து 76 குடும்ப அட்டைதாரர்களுக்கு மாஸ்க் வழங்கப்பட இருக்கிறது. குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அனைவருக்கும் தலா 2 துணியிலான மீண்டும் பயன்படுத்ததக்க மாஸ்க் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
6 கோடியே 74 லட்சத்து 15 ஆயிரத்து 899 பேருக்காக 13 கோடியே 48 லட்சத்து 31 ஆயிரத்து 798 மாஸ்க்குகள் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.