சேலம் ஏற்காடு மலை அடிவாரத்தில் உள்ள குருவம்பட்டி வன உயிரியல் பூங்காவிற்கு பலவகையான வண்ணத்துப்பூச்சிகள் வரத் தொடங்கியிருக்கின்றன.
வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த பூங்காவில் வண்ணத்து பூச்சி உணவு பூங்கா 6 மாதங்களுக்கு முன் ஏற்படுத்தப்பட்டது. இங்கு ”ஆன கூப்பியா, மில்கி ஷிப், ஜெனியா, தேள் கொடுக்கு” உள்ளிட்ட 38 வகையான செடிகள் வைத்து வளர்க்கப்பட்டன. இந்த செடிகளில் பூக்கும் பூக்களில் தேன் நிறைய இருக்கும் என்பதால் வண்ணத்துப்பூச்சிகள் அதிகளவில் வரத் தொடங்கியுள்ளன.
காமன் ஜே, சிற்றஸ், கரிலிப், பிளைன் டைகர், புளு பட்டர் போன்ற 24 வகையான வண்ணத்துப் பூச்சிகள் பூங்காவுக்கு வந்து செல்வதாக ஊழியர்கள் கூறுகின்றனர். மழைக்காலம் வரவிருப்பதால் கூடுதலாக வண்ணத்துப் பூச்சிகள் வரும் வாய்ப்புள்ளதாகக் கூறும் அவர்கள், வெளிநாடுகளில் இருந்து வரும் வண்ணத்துப் பூச்சிகளை கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தனர்.