தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வருமாறு டெஸ்லா நிறுவனர் எலன் மஸ்க் உட்பட உலகின் 11 முன்னணி மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்களின் நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளதாக தமிழக அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகப் பொருளாதாரச் சூழலில் கொரோனா ஏற்படுத்திய விளைவுகளால் சில நாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை இந்தியாவுக்கு இடம் பெயர்த்திட முடிவு செய்துள்ளதாகவும், அந்த முதலீடுகளை தமிழகத்துக்கு ஈர்க்க தலைமைச் செயலாளர் தலைமையில் சிறப்புப் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் வோக்ஸ்வாகன், ஸ்கோடா, மெர்சிடஸ் பென்ஸ், ஆடி, ஹொண்டா, டொயோட்டோ, பி.எம்.டபிள்யூ, லக்ஸ்ஜென் டயோயுவான், ஜாகுவார் லாண்ட்ரோவர், ஜென்ரல் மோட்டார்ஸ், செவர்லெட், டெஸ்லா ஆகிய 11 நிறுவனங்களின் நிர்வாகிகளுக்கு தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்து முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.