திருச்சி - நாகர்கோவில் சிறப்பு ரயில் திருச்சியிலிருந்து காலை 6 மணிக்குப் புறப்பட்டுச் சென்றது.
முன்பதிவு செய்திருந்த பயணிகள் மட்டும் வெப்பநிலை கண்டறியும் சோதனைக்குப் பின் ரயிலில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அனைவரும் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்ததுடன், முகக்கவசங்களை அணிந்திருந்தனர்.
திருச்சி - நாகர்கோவில் இடையே இன்று முதல் நாள்தோறும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. திருச்சியில் காலை 6 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் மதியம் ஒரு மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும். நாகர்கோவிலில் இருந்து பிற்பகல் 3 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் இரவு பத்தேகால் மணிக்குத் திருச்சி சென்று சேரும். இந்த ரயில்கள் திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி ஆகிய நிலையங்களில் மட்டும் நின்று செல்லும்.